கடற்கரை மனலில்
நடந்தது சென்றேன்...
என்னை பின் தொடர்ந்தன
என் பாத சுவடுகள்....
உருவத்தில் ஒன்றாய் இருந்தாலும்
ஒவ்வொன்றும் சில மாற்றங்களோடு...
எனக்கு பிடித்தவை சில
பிரியமானவை சில
வெறுத்தவை சில
வேடிக்கையானவை சில
அலைகலில் அழிந்தவை சிலஅதையும் மீறீஆழமாய் பதிந்தவை சிலஎன் கால்கள் சொன்னது...எல்லமே உனக்கு உரியது....உன் சுவடுகளே உன் அனுபவம் என்றது....
நீ பேசாமலெ என்னைஉளற வைத்தாய்... நீபார்க்காமலே என்னைநேசிக்க வைத்தாய் ...நீ உறங்கும் போதும் என்னை யோசிக்க வைத்தாய் ...
நீ தொடாமலே எனக்கு ஸ்பரிசம் தந்தாய்.. நீதொலையாமலெ என்னைதேட வைத்தாய்...அன்பே ,உன் நிழலெ சுகமானது ,உன் நினைவுகளில்மேலும் என்ன நான் கிறுக்க...????
உன்னை என்னிடம்
சேர்த்தது யார்?
பிரித்தது யார்?
உன் விழிகளை
தவிர எதுவுமெ
நினைவில்லை
எனக்கு.....
உன் உள்ளங்கையில் கட்டம்போட்டு விளையாடி ,உன் கைபிடித்தசந்தோஷம் கொண்டேன்.உன் விரல் ரேகைகளுக்குதெரியும் என்காதலின் மென்மை....
ஆம்! என் பேனா பட்டு
சிவந்தது உன் கைகள் மட்டுமல்ல,
நானத்தில் உன்முகமும் தான்.
அன்பே ,உன் நினைவில் இருந்துமீழவெ கூடாது...யாருக்கு பிடிக்கும்சுவாசம் நிறுத்த??
தேடி தவித்த கொக்குஒற்றை காலில் நிற்கஇல்லை தண்ணீர்..
அம்மா மடியில் அனைத்து பிடித்தால்,
அன்பாய் , இதமாய் , சுகமாய்,
அவள் கர்ப்ப கால நாட்கள்
என் கண்களீள்...
வாய் திறந்து பேச
கற்று கொடுத்தாள்,
என் குட்டி பல்லில்
கடிபட்டு சிரித்தாள்,
என் முட்டி நோக
விழுந்து நடந்த போது,
தட்டி கொடுத்தாள்.
சுட்டி பையன் என்று
பலர் புகழ, பெருமிதம் கொண்டாள்.
பட்டபடிப்பு முடித்ததும்
அவள் கண்களீள் ஆனந்த கண்ணீர்.
என்னை வளர்த்து அவள் முடித்த போது
முதுமை பெற்றாள்,
உடல் முதிர்ச்சி பெற்றாலும்,
அவள் கண்கள் என்னை கானும்
பிறந்த குழந்தையாய்....
அவள் அன்பு சுழளீள்
சிக்கி ஆனந்தம் கொள்வேன்
என்று்ம் அவள் நினைவுகளீல்.
"அம்மா!" என்று
இதய கதவுகள்
படபடக்க...
அவள் நிம்மதியாய்
உறக்கம் கொள்கிறாள்
அவள் கல்லறையில்......