பல முறை சந்தித்திருப்போம்.
இரவும் பகலும்
சமமாய் தோன்றும்.
சத்தம் பிடிக்காது,
சாப்பிட பிடிக்காது,
ஐம்புலன்களும் விழித்தபடி தூங்கும்,
உள்ளுக்குள்
இனம் புரியாமல்
விழித்திருக்கும் என்னவென்று
தெரியாத ஏதோ ஒன்று.
பந்தய குதிரையாய்
நினைவுகள் ஓடும்.
உறவுகளை வெறுத்து
உணர்வில் வாழ பிடிக்கும்.
மனசு கனத்து
மௌனம் மட்டுமே பேசும்.
நிஜம் சொல்லட்டுமா ?
வெளிச்சத்தில் தெரிவதெல்லாம்
உண்மையல்ல
"வெறுமை என்பதே நிஜம் "
Monday, August 31, 2009
Saturday, August 22, 2009
வட்டம்
தேடல் - சுகம்,
தொலைந்தது நாமாக
இல்லாதவரை.
தொலைவது - எளிது ,
தேடுவது நாமாக
இல்லாதவரை.
என்னையும் ஒரு நாள்
காணவில்லை.
தேடலில் தெரிந்தது
தொலைந்ததின் ஆழம்.
புரிந்தது இயற்கையின் நியதி,
மீள்வது தானே
அதன் ஒரு பகுதி.
மீண்டு வந்தேன் ,
நானகவே மீண்டும் வந்தேன்.
தொலைந்தது நாமாக
இல்லாதவரை.
தொலைவது - எளிது ,
தேடுவது நாமாக
இல்லாதவரை.
என்னையும் ஒரு நாள்
காணவில்லை.
தேடலில் தெரிந்தது
தொலைந்ததின் ஆழம்.
புரிந்தது இயற்கையின் நியதி,
மீள்வது தானே
அதன் ஒரு பகுதி.
மீண்டு வந்தேன் ,
நானகவே மீண்டும் வந்தேன்.
Monday, August 17, 2009
சிருஷ்டியின் பொம்மை
எந்த சிற்பியின் கைவண்ணம் ?
உன் உருவத்தில் இத்தனை
நளினமான வளைவுகள்?
நிச்சல் தெரியுமா உனக்கு?
சிறிது பெரிதாய் எத்தனை ரூபம்?
இடம் , வலமாய் திசைகள் கூட உண்டா?
அமைதியாய் இருந்தாலும் ,
உனக்குள் எத்தனை ஓங்காரம் ?
ஜனனத்தில் இருந்தாய் ,
மரணத்தில் இருந்தாய்,
இடைப்பட்ட காலத்தில்
எங்கு நீ சென்றாய் ?
பதில்கள் ஒலிப்பாயா
வலம்புரி சங்கே!!?
உன் உருவத்தில் இத்தனை
நளினமான வளைவுகள்?
நிச்சல் தெரியுமா உனக்கு?
சிறிது பெரிதாய் எத்தனை ரூபம்?
இடம் , வலமாய் திசைகள் கூட உண்டா?
அமைதியாய் இருந்தாலும் ,
உனக்குள் எத்தனை ஓங்காரம் ?
ஜனனத்தில் இருந்தாய் ,
மரணத்தில் இருந்தாய்,
இடைப்பட்ட காலத்தில்
எங்கு நீ சென்றாய் ?
பதில்கள் ஒலிப்பாயா
வலம்புரி சங்கே!!?
Saturday, August 8, 2009
மரப்பாச்சி பொம்மை
முழிச்ச கன்னு மூடாது,
கைய கால அசைக்காது,
கலர் கலரா கால் சட்டை,
தச்ச தையல் தெரியாது,
வாய் திறந்து பேசாது,
வசதி பாக்க தெரியாது,
உட்கார வச்ச இடம்
விட்டு துளி நகராது.
எல்லாம் தான் நீ செஞ்ச.
என்னத்த சாதிச்சென்னு,
ஏளனம் பன்னுது,
எதிர் வீட்டு குழந்தை கையில்
ஒய்யாரம அந்த மரப்பாச்சி பொம்மை!
கைய கால அசைக்காது,
கலர் கலரா கால் சட்டை,
தச்ச தையல் தெரியாது,
வாய் திறந்து பேசாது,
வசதி பாக்க தெரியாது,
உட்கார வச்ச இடம்
விட்டு துளி நகராது.
எல்லாம் தான் நீ செஞ்ச.
என்னத்த சாதிச்சென்னு,
ஏளனம் பன்னுது,
எதிர் வீட்டு குழந்தை கையில்
ஒய்யாரம அந்த மரப்பாச்சி பொம்மை!
" சும்மா "
அர்த்தம் இல்லாமல்
அதிகம் உபயோகிப்போம்.
என்னவென்று யாருக்கும்
தெரியாது.
"ஏன் சொன்னாய்"? கேள்வி கேட்டால்,
பதிலும், அதேதான் " சும்மா"
அதிகம் உபயோகிப்போம்.
என்னவென்று யாருக்கும்
தெரியாது.
"ஏன் சொன்னாய்"? கேள்வி கேட்டால்,
பதிலும், அதேதான் " சும்மா"
Saturday, August 1, 2009
பழைய காதலி
பார்வைகளும், ஸ்பரிசங்களும்,
கடிதங்களும், கவிதைகளும்,
ஊடல்களும்,கூடல்களும்,
அவள் நினைவில் இருக்கிறதா?
தெரியவில்லை.
கனவிலும், கற்பனையிலும் பறந்தவள்
இன்று குடும்ப கூட்டில்
கலந்து போனாள்.
கனவனாய் காதலிப்பதை விட
பழைய காதலனாய் விரும்புகிறேன்
அதிகமாய்
என்று யாராவது சொல்லுங்களேன்
என் பழைய காதலியும்
இன்று என் மனைவியும் ஆனவளிடம்...!!
Subscribe to:
Posts (Atom)