தேடல் - சுகம்,
தொலைந்தது நாமாக
இல்லாதவரை.
தொலைவது - எளிது ,
தேடுவது நாமாக
இல்லாதவரை.
என்னையும் ஒரு நாள்
காணவில்லை.
தேடலில் தெரிந்தது
தொலைந்ததின் ஆழம்.
புரிந்தது இயற்கையின் நியதி,
மீள்வது தானே
அதன் ஒரு பகுதி.
மீண்டு வந்தேன் ,
நானகவே மீண்டும் வந்தேன்.
No comments:
Post a Comment