இமைகளை மூடி,
கண்களை திறந்தேன்.
இறக்கைகளில்லாமல் பறவைகளுடன்,
கூட்டம் கூட்டமாய்
பாதை இல்லை
ஆனால் பயனம் இனிது
திசைகள் இல்லை
ஆனால் திகட்டவில்லை
பாதங்களில் பூமியில்லை
மேகம் உடைந்து
என் தேகத்தில் படர்ந்து
வானத்தின் வாசம்
சுவாசங்களில்
காற்று காதுமடல்களை
மடித்து ஆர்ப்பரித்து சென்றது.
திரும்பி செல்ல நினைத்தேன்,
தலைமை பறவை
திரும்பி என்னிடம் சொன்னது
"இன்னும் சற்று உயரம் போவோம்,வா"
No comments:
Post a Comment