பெயர் : அஞ்சலம்மா
வயது : 60
அனுபவம் : நிறைய ..
சிறு குறிப்பு :
கட்டினவன் காலத்தோடு
என் வசந்த காலத்திற்கு
முற்றுபுள்ளி .
இப்போது வெயில் காலம்
ஏங்கி என் கண்கள்
காத்திருக்கிறது.
பெற்ற நான்கு மக்களும்
ஆளுக்கொரு திசையில்
நடுவில் நான் மட்டும்
அரசாங்கபாலத்தின் நிழலில்
இளநீர் விற்கிறேன் .
பெற்ற மகன்களை விட
யார் யாரோ நீறுற்றிய
தென்னை மரங்கள்
எனக்கு கஞ்சி ஊற்றுகிறது.
என் அடுப்பு உலையில்
சோறு போடுகிறது.
விரக்தியின் வலி
நான் சீவி வீசும்
இளநீருக்கே தெரியும் ......
Sunday, February 28, 2010
Wednesday, February 24, 2010
சூட்சுமம்
அந்தரத்தில் ஒரு பந்து ,
தன்னையும் சுற்றி
படைத்தவனையும் சுற்றி
உள்ளே நிரம்பி வழியும்
உயிர் ஓட்டம்
பஞ்ச பூதங்களின்
பல்வேறு வேஷம்
உள்ளே நீயும் குடிகொண்டாய்
உருவங்களை படைத்த நீ
எந்த ரூபத்தில் ?
எங்கும் நிறைந்தவனே
எங்கு இருக்கிறாய் ?
தியானஆழ்மன கூவலில்
ஒரு நாள் பதிலும் தந்தாய்
" நான் உனக்குள்ளே இருக்கிறேன் !"
என்றாய் .
சூட்சுமம் சொன்னாய்
என் தேடல் எனக்குள்ளே
தொடங்கியது
இறுதியில்
ஒளியாய்
உன்னை கண்டேன்
சரணா கதியடைநதேன்
ஓம் ஓம் ஓம்
தன்னையும் சுற்றி
படைத்தவனையும் சுற்றி
உள்ளே நிரம்பி வழியும்
உயிர் ஓட்டம்
பஞ்ச பூதங்களின்
பல்வேறு வேஷம்
உள்ளே நீயும் குடிகொண்டாய்
உருவங்களை படைத்த நீ
எந்த ரூபத்தில் ?
எங்கும் நிறைந்தவனே
எங்கு இருக்கிறாய் ?
தியானஆழ்மன கூவலில்
ஒரு நாள் பதிலும் தந்தாய்
" நான் உனக்குள்ளே இருக்கிறேன் !"
என்றாய் .
சூட்சுமம் சொன்னாய்
என் தேடல் எனக்குள்ளே
தொடங்கியது
இறுதியில்
ஒளியாய்
உன்னை கண்டேன்
சரணா கதியடைநதேன்
ஓம் ஓம் ஓம்
Tuesday, February 23, 2010
ஆதலினால் காதல் செய்வீர்...
மணிக்கொரு முறை
கடிகார முட்களில்
முத்தசத்தம்
சத்தமிட்டு ஒடிவந்த
இருநதிகள் சலசலத்து
சங்கமிப்பு
சங்கத்தமிழ் சொன்ன
முப்பாலில் மூன்றாம்
இன்பம்
அட..!!
இன்பமாய் அனுதினமும்
சூரியனுக்கு காத்திருக்கும் தாமரை
வினோத இயற்கை
வேதனையும் சாதனையும்
காதலர்க்கே.
காதலுக்கில்லை
இங்கு இன்னும் யாராவது
காதல் செய்யவில்லையா??
புல்லாங்குழலாக மூங்கில்கள்
என்றும் தயார்..
ஒருமுறையாவது இசைத்து பார்
முன்சென்ற பேருந்தின் பின்
மூன்று வார்த்தையில் ஹைக்கு
"ஆதலினால்
காதல்
செய்வீர்.....!!!"
அரசாங்கத்தின் இலவச பிரசாரம்
கடிகார முட்களில்
முத்தசத்தம்
சத்தமிட்டு ஒடிவந்த
இருநதிகள் சலசலத்து
சங்கமிப்பு
சங்கத்தமிழ் சொன்ன
முப்பாலில் மூன்றாம்
இன்பம்
அட..!!
இன்பமாய் அனுதினமும்
சூரியனுக்கு காத்திருக்கும் தாமரை
வினோத இயற்கை
வேதனையும் சாதனையும்
காதலர்க்கே.
காதலுக்கில்லை
இங்கு இன்னும் யாராவது
காதல் செய்யவில்லையா??
புல்லாங்குழலாக மூங்கில்கள்
என்றும் தயார்..
ஒருமுறையாவது இசைத்து பார்
முன்சென்ற பேருந்தின் பின்
மூன்று வார்த்தையில் ஹைக்கு
"ஆதலினால்
காதல்
செய்வீர்.....!!!"
அரசாங்கத்தின் இலவச பிரசாரம்
அன்பே.. நான் வருகிறேன்!
கவ்விய இருளில்
என் வாகன விளக்கொளி..
உன்னை நோக்கி வந்து
கொண்டு இருக்கிறேன்..
அழைப்புக்கு நன்றி
உன் மண நாள் கொண்டாட
நானும் வருகிறேன் -மறக்க
இயலாத நினைவுகளோடு .
காதலின் ஈரம்
வாடாமல் உன் திருமண
அழைப்பில் வழிகிறது -
என் கண்களில் இருந்து
மாலை கடற்கரையில்
மடிமீது தலை சாய்த்து
முடிகோதிய உன் விரல்கள்..
பார்வைகளையே பரிசாக்கும்
உன் கண்கள்.
என்னை தழுவி சலித்த
உன் கைகள் .
நடனமாய் நடக்கும்
உன் கால்கள் .
என்னை பூட்டி வைத்ததாய்
சொன்ன இதயம்..
சாவி தொலைத்தாயா?
இதயம் தொலைத்தாயா ?
சந்திப்போம் மணமேடையில்
அன்பே..
உன்கைகளை கட்டிவிடு..
மடிமீது தலை சாய்த்து
முடிகோதிய உன் விரல்கள்..
நீண்டுவிடும்
என் கண்ணீர் துடைக்க..
என் வாகன விளக்கொளி..
உன்னை நோக்கி வந்து
கொண்டு இருக்கிறேன்..
அழைப்புக்கு நன்றி
உன் மண நாள் கொண்டாட
நானும் வருகிறேன் -மறக்க
இயலாத நினைவுகளோடு .
காதலின் ஈரம்
வாடாமல் உன் திருமண
அழைப்பில் வழிகிறது -
என் கண்களில் இருந்து
மாலை கடற்கரையில்
மடிமீது தலை சாய்த்து
முடிகோதிய உன் விரல்கள்..
பார்வைகளையே பரிசாக்கும்
உன் கண்கள்.
என்னை தழுவி சலித்த
உன் கைகள் .
நடனமாய் நடக்கும்
உன் கால்கள் .
என்னை பூட்டி வைத்ததாய்
சொன்ன இதயம்..
சாவி தொலைத்தாயா?
இதயம் தொலைத்தாயா ?
சந்திப்போம் மணமேடையில்
அன்பே..
உன்கைகளை கட்டிவிடு..
மடிமீது தலை சாய்த்து
முடிகோதிய உன் விரல்கள்..
நீண்டுவிடும்
என் கண்ணீர் துடைக்க..
Monday, February 15, 2010
பொய் தானே மெய்?
"காதலின் அர்த்தமே தெரியாது"
அவள் உதடுகள் சொன்னதை
அவள் கண்கலே மறுத்தன
நட்பு மட்டுமே நமக்குள்
என்றவள் தூரசென்று
திரும்பி பார்த்தாள்.
விலகி செல்ல செல்ல
இடைவெளி குறைந்தது
பிறந்த நாட்கள்
அவள் வருகையில்
பண்டிகை ஆனது
கைப்பேசி கடவுளானது
கடிகாரம் எதிரியானது
நட்பும்-காதலும் போட்டி
நிஜமாகவே சுவாரசியம்தான்
தோற்று போக
இருவருக்குமே
எத்தனை ஆசை!
அவள் உதடுகள் சொன்னதை
அவள் கண்கலே மறுத்தன
நட்பு மட்டுமே நமக்குள்
என்றவள் தூரசென்று
திரும்பி பார்த்தாள்.
விலகி செல்ல செல்ல
இடைவெளி குறைந்தது
பிறந்த நாட்கள்
அவள் வருகையில்
பண்டிகை ஆனது
கைப்பேசி கடவுளானது
கடிகாரம் எதிரியானது
நட்பும்-காதலும் போட்டி
நிஜமாகவே சுவாரசியம்தான்
தோற்று போக
இருவருக்குமே
எத்தனை ஆசை!
Sunday, February 7, 2010
அன்பு(?) இல்லம்
பிரம்மாண்டமாய் வளர்ந்து
முடிந்ததும் விழுதுகளை
அனுப்புகிறது
ஆலமரம்
தான் வளர்ந்த விதையை
நலம் விசாரிக்க.
நன்றி கெட்ட மனிதா
உன் விதைகளை
விசாரிக்க எத்தனை
முதியோர் இல்லங்கள்.
மறக்காதே
வாழ்க்கை வட்டத்தில்
உனக்கும் எதிர்காலவீடு
தயார் என்பதை!
முடிந்ததும் விழுதுகளை
அனுப்புகிறது
ஆலமரம்
தான் வளர்ந்த விதையை
நலம் விசாரிக்க.
நன்றி கெட்ட மனிதா
உன் விதைகளை
விசாரிக்க எத்தனை
முதியோர் இல்லங்கள்.
மறக்காதே
வாழ்க்கை வட்டத்தில்
உனக்கும் எதிர்காலவீடு
தயார் என்பதை!
கதை
புத்திசாலி பாட்டி
காக்கைகளும்,
ஆமைகளிடம் ஏமாறாத
தூங்காத முயல்களும்,
குரங்குக்கெ குல்லாய்
போடும் வியாபாரிகளும்,
பொய்யான நண்பனை
மரம் ஏறி கொல்லும்
கரடிகளும்
வலம் வரும் காலம் இது.
யாராவது புதுக்கதை
சொல்லுங்களேன்
குழந்தைகளுக்கு..
காக்கைகளும்,
ஆமைகளிடம் ஏமாறாத
தூங்காத முயல்களும்,
குரங்குக்கெ குல்லாய்
போடும் வியாபாரிகளும்,
பொய்யான நண்பனை
மரம் ஏறி கொல்லும்
கரடிகளும்
வலம் வரும் காலம் இது.
யாராவது புதுக்கதை
சொல்லுங்களேன்
குழந்தைகளுக்கு..
Subscribe to:
Posts (Atom)