"காதலின் அர்த்தமே தெரியாது"
அவள் உதடுகள் சொன்னதை
அவள் கண்கலே மறுத்தன
நட்பு மட்டுமே நமக்குள்
என்றவள் தூரசென்று
திரும்பி பார்த்தாள்.
விலகி செல்ல செல்ல
இடைவெளி குறைந்தது
பிறந்த நாட்கள்
அவள் வருகையில்
பண்டிகை ஆனது
கைப்பேசி கடவுளானது
கடிகாரம் எதிரியானது
நட்பும்-காதலும் போட்டி
நிஜமாகவே சுவாரசியம்தான்
தோற்று போக
இருவருக்குமே
எத்தனை ஆசை!
No comments:
Post a Comment