உன்னிடம் சண்டையிட ஆசை
ஆனால் நீ விழிகளிலேயே
சமாதானம் பேசுவாய்
உனக்காக காத்திருக்க ஆசை
ஆனால் எனக்கு முன்னமே நீ
பூத்திருக்கிறாய்
உனக்கு பிடித்ததை பரிசளிக்க ஆசை
என்ன செய்வது?என்னைதானே
உனக்கு மிகவும் பிடிக்கும்
உன்னை மிக நேசிப்பதாய் நினைப்பேன்
ஆனால் நீ என்னையே
முழுவதுமாய் சுவாசிக்கிறாய்!!
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய புதுவருட வாழ்த்துக்கள்
ReplyDeleteஅழகான கவிதை!!!
ReplyDeleteநன்றி
ReplyDelete