நண்பன் கைதொட்ட கல்
நெற்றியில் இட்டது
மிதிவண்டி பழகி
கால்விரல் நுனிகளில்
காத்திருப்பின் உச்சத்தில்
கைகிழித்து உதிரம்
வழிந்த கோடுகள்
வலிகள் நாட்களில் உடலில்
வடுவாய் மாறியது.
ஆனால் உன் உதடுகள் உதிர்த்த
"பிடிக்கலைன்னு சொன்னேனா?"
" நீ தான்டா எல்லாமே"
"சொல்லாம போடா"
"தூங்க வைடா என்னை"
"பிரிஞ்சாலும் நினைப்பியா?"
"வீட்டில சரின்னு சொல்லனும்..."
"முடியாதுன்னு தோனுது.."
"இனி பார்க்க வராதே என்னை!"
"ஜூன் - 5 எனக்கு கல்யாணம்"
எல்லாம் தழும்புகள்
என் இதயத்தில்
ஆகா.. கதை சொல்லும் கவிதை... அருமை தொடருங்க...
ReplyDeleteநன்றி தோழி
ReplyDelete