ஆதியும் அந்தமும் இல்லாத
வரிசை கோடுகளில் எறும்பு
சொல்லும் ஒழுக்கமும் நேர்த்தியும்
ஈரபசை காற்றோடு மோதும்
மண்வாசம் சொல்லும் நெருங்கி
வரும் மழையின் வருகையை
பேருந்து பயணத்தில் தாயின்
தோளில் இருந்து சினேகபுன்னகை
உதிர்க்கும் பிஞ்சுகுழந்தை
பள்ளி வாசலில் கலங்கி செல்லும்
அம்மாவும் கையசைத்து உள் ஓடும்
புத்தகபை சுமைதாங்கியும்
தூரத்து பயணத்தில் தூங்காமல்
கண்மூட காதுக்குள் தாளமிடும்
பிரியமான இசையொலி
பிடித்தமான கோயிலில்
ஆழமான அமைதியில் திடீரென
கேட்கும் கோயில் மணியோசை
திருவிழா சலசலப்பு முடிந்த காலி
மைதானத்தில் குதித்து விளையாடும்
ஆட்டு குட்டிகள் சில
சுவாசிப்பது மட்டும் அல்ல
நேசிக்கவும் நிறைய கொட்டி கிடக்குது
நம்மை சுற்றி ,காற்று போல் கலந்து!
No comments:
Post a Comment