பயணங்களின் நடுவில்
இளைப்பாற அமரும்போது கண்கள்
நம்மை கேட்காமல் வந்த வழி பார்க்கும்
நிஜமா ? நிழலா? ஆனால்
எதையோ சாதித்ததாய் தோன்றும்
சுமைகள் விருப்பமா? பாரமா? கடமையா?
சற்று நேரத்தில் சிந்தனையில் மறக்கும்
மனவலிகள் உடல்வலிக்கு துணையாகும்
நம் துணைகள் பிரியும்போது
பயணம் இன்னும் தொலைவா? முடிவா?
ஏக்கம் மட்டுமே ஏங்கி நிற்கும்
யார் சமாதனம் சொன்னாலும்
சருமமும் கேசமும் சண்டையிடும்
உண்மையில் முதிர்ச்சி அனுபவம் தானே
சரி காத்திருக்கிறேன்
இளமை முழுதும் களையும் வரை
/// உண்மையில் முதிர்ச்சி அனுபவம் தானே
ReplyDeleteசரி காத்திருக்கிறேன்
இளமை முழுதும் களையும் வரை ///
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்...