மனிதர்கள் அற்ற
வளைவு நெளிவு சாலையில்
நம் முதல் பயணம்
குழப்பவே செய்யும்
முச்சந்திகளும் நான்குசாலை
முத்தசந்திப்புகளும்
கேள்விகுறியில் நிரம்பி வழியும்
புத்தி சக்தியற்று
நிற்கும்போது சத்தமில்லாமல்
எங்கிருந்தோ வரும்
ஒரு மூதாட்டியோ
வீடு திரும்பும் பள்ளி சிறுவனோ
மிதிவண்டி வழிவரும்
யாரோ ஒருவரோ
வழி சொல்லி செல்வர்
நமக்காகவே வந்த
வழிகாட்டிபோல
இந்த முகங்கள் சில
நினைவில் தொலைய மறுக்கும்
நான் வழிகாட்டிய
சிலரேனும் என்றாவது
என் முகம் நினைப்பரோ ???
Wednesday, July 28, 2010
Wednesday, July 21, 2010
குறுந்தகவல்
பின்னிரவு அமைதியை கலைத்தபடி
நீண்ட இடைவெளிக்கு பிறகு
நீ அனுப்பிய குறுந்தகவல்
பார்த்து என் கைபேசி
என்னை சத்தமிட்டு அழைத்தது
பொழுதுகள் புரியாத கருவி
என்னை விட்டு
நீ பிரிவதை
நீ பிரிவதை
உன் ஆங்கிலம்
சுருக்கமாய் சொன்னது
வருத்தப்பட நேரமே
கொடுக்காமல் அடுத்து வந்த
நண்பனின் நகைச்சுவை
வாழ்க்கை வேகமாய்
போவதை நம்மை விட
நம் கைபேசிகள் புரிந்து கொண்டன
சுருக்கமாய் சொன்னது
வருத்தப்பட நேரமே
கொடுக்காமல் அடுத்து வந்த
நண்பனின் நகைச்சுவை
வாழ்க்கை வேகமாய்
போவதை நம்மை விட
நம் கைபேசிகள் புரிந்து கொண்டன
Thursday, July 15, 2010
மேகங்களின் இடையே
மேகங்களை கலைத்து
சந்தோஷபட்டது காற்று
விருப்பமான கனவு
சந்தோஷபட்டது காற்று
விருப்பமான கனவு
கலைந்தது போல் பாரம்
தொலைந்த பொம்மை
தேடும் குழந்தையாய்
வானவீதியில் தேடி நடக்கிறேன்
வழியில் தட்டுபட்டது
கலைந்த மேகங்களின் இடையே
மிதந்து வந்த
சில பறவை இறகுகளும்...
முகத்தில் மோதிய
சில மழைதுளிகளும்...
வருத்தமாய் திரும்பும் பொழுது
மேகங்கள் மீண்டும்
இணைய தொடங்கின
ஓவியங்கள் பல உயிர் வந்து
ஓட தொடங்கின !
Thursday, July 1, 2010
முகாமில் இருந்து....
சொந்த வீடு சுமந்து
செல்லும் நத்தையாய்
தினம் இடம் பெயர்கிறேன்
என் நிரந்தர பூமி
இன்னும் எவ்வளவு தூரம்?
என் உடைமைகள் தானே
என் உண்மையான பாரம்
தாய் நாட்டிலும்
அகதியாய் வாழ்வது
சொந்தவீட்டிலே சிறையல்லவா?
கைக்கெட்டும் தூரத்தில் உறவுகள்
கைகட்டி வேடிக்கை பார்க்க
அந்நிய கைகளாவது
கைக்குட்டையோடு
வருகின்றன
எம் கண்களில் வழிவது
உப்புக்கண்ணீர் அல்ல
உதிரம் என அறியாமல்
ஆனால்
பானன் யாழ் மீட்டி
பரிசாய் பெற்ற மண்
முழுதும் பாழாய் போகவில்லை
உதிரங்களை விதைத்திருக்கிறோம்
விருட்சங்களுக்காக காத்திருக்கிறோம்.....!
வேண்டுவன வேண்டும்!
மீண்டும் பிறந்திட வேண்டும்
இந்த பூமிப்படுக்கையிலே
தாழாட்டு பாடிடவே இதே
தமிழ்த்தாயின் மடியும் வேண்டும்
எளிதில் தமிழ்ப்பற்றிடவே விரைவில்
எனக்கு பாரதி விளங்கவேண்டும்
சுற்றும் உலகினிலே தமிழ்ப்படை
சூழவலம் வர வேண்டும்
தமிழர்க்கு இழைத்திடும் கொடுமைகளை
வேரினில் கொய்ய வேண்டும்
வேதனையுற்ற மக்களுக்கு துயர்துடைத்து
சாய்ந்திட தோள்தர வேண்டும்
வேல்தனை கொண்டு இனிபூசைகளில்லை
தமிழா நம்சோதனை தீர்ந்திடவே
முன்ணேற்ற பாதையில் குறுக்கிடும்
விஷஜந்துக்கள் கொல்ல வேண்டும்
வீட்டுக்குவீடு காவியம் பாடிட
இளங்கவிகள் கோடி வேண்டும்
இனி “இல்லை” என்ற சொல்லே
தமிழகாராதியில் இல்லாது போகவேண்டும்
Subscribe to:
Posts (Atom)