சொந்த வீடு சுமந்து
செல்லும் நத்தையாய்
தினம் இடம் பெயர்கிறேன்
என் நிரந்தர பூமி
இன்னும் எவ்வளவு தூரம்?
என் உடைமைகள் தானே
என் உண்மையான பாரம்
தாய் நாட்டிலும்
அகதியாய் வாழ்வது
சொந்தவீட்டிலே சிறையல்லவா?
கைக்கெட்டும் தூரத்தில் உறவுகள்
கைகட்டி வேடிக்கை பார்க்க
அந்நிய கைகளாவது
கைக்குட்டையோடு
வருகின்றன
எம் கண்களில் வழிவது
உப்புக்கண்ணீர் அல்ல
உதிரம் என அறியாமல்
ஆனால்
பானன் யாழ் மீட்டி
பரிசாய் பெற்ற மண்
முழுதும் பாழாய் போகவில்லை
உதிரங்களை விதைத்திருக்கிறோம்
விருட்சங்களுக்காக காத்திருக்கிறோம்.....!
No comments:
Post a Comment