சந்தோஷபட்டது காற்று
விருப்பமான கனவு
கலைந்தது போல் பாரம்
தொலைந்த பொம்மை
தேடும் குழந்தையாய்
வானவீதியில் தேடி நடக்கிறேன்
வழியில் தட்டுபட்டது
கலைந்த மேகங்களின் இடையே
மிதந்து வந்த
சில பறவை இறகுகளும்...
முகத்தில் மோதிய
சில மழைதுளிகளும்...
வருத்தமாய் திரும்பும் பொழுது
மேகங்கள் மீண்டும்
இணைய தொடங்கின
ஓவியங்கள் பல உயிர் வந்து
ஓட தொடங்கின !
உங்கள் கவிதை உயிரோட்டம் உள்ளது. வாழ்த்துகள்
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே
ReplyDelete