உதிர்ந்த பூக்கள்
சில்லரை மிட்டாய்கள்
தூக்கம் கலையாத
கை தட்டல்கள்
வாய் நிறைய
வாக்குறுதிகள்
இவையெல்லாம் பொய்யென
கோபித்து
உயரச்சென்று பறக்குது
நம் தேசியக்கொடி
கொண்டாடப்பட்டது
மீன்டும் ஒரு
சுதந்திரதினம்
Wednesday, August 25, 2010
Friday, August 13, 2010
மிருதுளா : சிறுகுறிப்பு
எச்சரிக்கும்
உள்மனம்
உதடுகள் முத்தமிட்டு
உச்சரிக்கும் பெயர்
இது என்று ஆனால்
என்று உனை கண்டேனோ -
நழுவும் மேலாடை
இறுக்கி பிடித்து
சரியும் கேசம் ஒதுக்கி
பூக்களை உதிர்த்த
மரத்தடியில் உன் விரல்
நுனிகள் பூ சேர்த்த பொழுது
அன்பே மிருதுளா ...!!
அன்றே
நானும் உதிர்ந்தேன்
சருகானேன்
என்னை உன்
பாதங்களிலாவது
மிதித்து போ !!
Subscribe to:
Posts (Atom)