உச்சரிக்கும் போதுதான்
நிஜமாகவே ரசித்தேன்
நட்பு முகமூடி அகற்றி
நேசம் கொண்டோம்
என் சுவாசத்தை நேசமாக்க
சொல்லி தந்தாய்
என் கைகளுக்கு கவிதை
எழுத கற்றுகொடுத்தாய்
என் கனவுகளை
கொள்ளையடித்தாய்
உன் பார்வைகளில்
என்னை அழகாக்கினாய்
மென்மையாய் என் பெண்மை
உணர்த்தி உண்மையாய்
என்னையே சுவாசித்தாய்
என் உலகம் முழுக்க
நீக்கமற நிறைந்தாய்
போதுமடா மறு பிறவிகள்
வேண்டாம்..
போதும் உன் அனைப்புகளின்
கதகதப்பு ...
இப்படிக்கு
உன் மிருதுளா