...........................
அம்மா பசியென்று சொல்லி
நான் கேட்டதில்லை ,
அவளுகென்று எதையும் எடுத்து
வைத்துகொண்டதாய் நினைவில்லை
அம்மா சிரித்து
பார்த்ததை விட சிவந்த
கண்களோடு பார்த்ததே அதிகம்
அவளுக்கு நான் சேலை
வாங்கி கொடுக்க
ஆசை பட்டபொழுது
எனக்கு வயதோ வசதியோ
எட்டவில்லை
இயலாதபோது தானே
ஆசைகள் அதிகம்
கடைசியில் ஒருநாள்
உறங்கசெல்லும் முன்
அம்மாவை இறுதியாய்
பார்த்தேன் ...
அதிகாலையில் யாரிடமும்
சொல்லாமல் சென்றவள்
திரும்பி வரவேயில்லை
சில தினகளுக்கு பிறகு
தகவல் வந்தது
தனை தானே
மாய்த்து கொண்டதாய்
.......... ........
No comments:
Post a Comment