அன்பே ........!
இந்த பின்னிரவு
கவிதை சொல்லுமா
உனக்கு என்னுள்
நீ எங்கு தொலைந்தாய் என்று ?!
அல்லது
உன் கண்ணீர் வழிந்த
கண்ணங்களில் என்
அன்பு முத்தங்கள்
அழுத்தி சொன்னதா
எனக்குள் நீ நடத்தும்
ராஜாங்கத்தை !
இது நொடிப்பொழுது
பிரிவுகளை மிகைப்படுத்தி
ஊடல்களில்
சலனமிடும் காலம்.
காதலின் வயது
காலனுக்கே
அரியாதது
காத்திருந்தாயா
இத்தனை காலம்
எனை காதலில் கொல்ல ?
என் அரவனைப்பின்
இதம் உனக்கு மிகவும்
பிடிக்கும் ...
எனக்கும் சுகமான ஒன்று...
மெல்ல சாகிறேன்
வீழ்வது உன் மடியில் தானே
என எனக்கு நானே சொல்லியபடி......