மனதினில் மலர்கின்றாய்
பூக்களில் சிரிக்கின்றாய்
மழலையில் திளைக்கின்றாய்
மௌனத்தில் மொழிகின்றாய்
தியானத்தில் ஸ்பரிசித்தாய்
தாயாய் அரவணைத்தாய்
தந்தையாய் கண்டித்தாய்
தோழனாய் தோள் தந்தாய்
நீக்கமற நிறைந்தவனே
நீலவண்ணமாய் திகழ்பவனே
தித்திக்கும் தித்திக்கும்
உன் புகழ் பாட எத்திக்கும்
குழலோசை எதிரொலிக்க
உன் பொற் பாதங்கள்
பணிகின்றேன் !