துவக்கம் முடிவு
என்பது எதுவுமில்லை
இணைவது என்பது
துவக்கமாகாது
பிரிவென்பது முடிவாகாது
நெடிய பயணம்
முடிவுறாது ஒரு துவக்கம்
ஏதோ ஒன்றின்
முடிவிலே நடந்தது
ஒரு தொடர் என்றே சொல்லிவை
மகிழ்வும் வலியும்
மனம் சொல்லும் உணர்வு
சுகமும் சோகமும்
வாழ்வின் இயல்பு
நிஜமென்பது இல்லாத பொழுது
நிழல் எப்படி சாத்தியம் ?!
No comments:
Post a Comment