Saturday, August 8, 2009

மரப்பாச்சி பொம்மை

முழிச்ச கன்னு மூடாது,
கைய கால அசைக்காது,
கலர் கலரா கால் சட்டை,
தச்ச தையல் தெரியாது,
வாய் திறந்து பேசாது,
வசதி பாக்க தெரியாது,
உட்கார வச்ச இடம்
விட்டு துளி நகராது.

எல்லாம் தான் நீ செஞ்ச.
என்னத்த சாதிச்சென்னு,
ஏளனம் பன்னுது,
எதிர் வீட்டு குழந்தை கையில்
ஒய்யாரம அந்த மரப்பாச்சி பொம்மை!

1 comment:

  1. மரப்பாச்சி பற்றிய மிகவும் அருமையான எளிமையான கவிதை !

    ReplyDelete