Saturday, August 6, 2011

பாடம்

வரிசையில் நடக்கும்
எறும்புகள் 
காத்திருந்து சாலை 
கடக்கும் கால்நடைகள் 
பகிர்ந்து உண்ணும் 
காகங்கள் 
பாடங்கள் பல 
நம் பாதையில் உண்டு
படிக்க தெரிந்தால் போதும் 

Thursday, July 28, 2011

தரிசனம்

பசியோடு அங்கும இங்கும் 
பார்த்தபடி வட்டமிட்டு 
வானத்தில் பறந்தது 
பருந்து -  
பூமியில் அதை 
பார்த்து கன்னத்தில் 
போட்டுகொண்டனர்
பக்தகோடிகள்-
இறை தேடும் பறவை 
இறைவனானது

பள்ளிக்கூடம்

 எட்டாத மேஜை 
இன்று என்னை அண்ணாந்து
பார்த்து வியந்தது
சாயம் போன கரும்பலகை 
தனக்கும் வயதானதை 
சாட்சியாய் சொன்னது 
என்றும் விரும்பி அமரும் 
முதல் வரிசை நாற்காலி 
என்னை ஏக்கமாய் பார்த்தது 
"தம்பி சௌக்கியமா?"
கணக்கு வாத்தியார் 
விசாரிப்பில் வியந்தேன்
அட இவருக்கு 
இப்படியும் பேச தெரியுமா?
என் முதல் கவிதையை 
ரசித்த தமிழாசிரியயை
நினைத்தபடி படித்த 
பள்ளிக்கூடம் விட்டு 
வெளிவந்தேன் 
மீண்டும் உள்ளே செல்ல 
ஆசை வந்தது
முதல் முறையாய் !!! 

Wednesday, July 27, 2011

பழைய கடிதம்

...........................
அம்மா பசியென்று  சொல்லி 
நான் கேட்டதில்லை  ,
அவளுகென்று எதையும் எடுத்து 
வைத்துகொண்டதாய் நினைவில்லை
அம்மா சிரித்து 
பார்த்ததை விட சிவந்த 
கண்களோடு பார்த்ததே அதிகம் 
அவளுக்கு நான் சேலை 
வாங்கி கொடுக்க 
ஆசை பட்டபொழுது 
எனக்கு வயதோ வசதியோ 
எட்டவில்லை 
இயலாதபோது தானே 
ஆசைகள் அதிகம் 
கடைசியில் ஒருநாள் 
உறங்கசெல்லும் முன் 
அம்மாவை இறுதியாய்
பார்த்தேன் ...
அதிகாலையில் யாரிடமும் 
சொல்லாமல் சென்றவள் 
திரும்பி வரவேயில்லை 
சில தினகளுக்கு பிறகு 
தகவல் வந்தது 
தனை தானே 
மாய்த்து கொண்டதாய்
.......... ........

வர்ணஜாலம்

எங்கும் எதிலும் 
பரவி இது இல்லாதது 
ஒன்றுமற்றது என்று 
சொல்லும்படி எங்கும் 
கலந்தது வர்ணங்கள் 
எண்ணங்களும் கூட 
வண்ணங்கள் பூசியே 
வெளிபடுகின்றன ..
படைத்தவன் தூரிகை 
எத்தனை கவித்துவமானது 
என்பதை மலை முகடுகளும்
பள்ளத்தாக்குகளும்
என்றும் நிறங்களில் சிரிக்கும் 
பூக்களும் கதை கதையாய் சொல்லும்!
முதல் முறை பிறந்த வண்ணம் 
எதுவென்று யோசித்தேன் ?
யாரேனும் தெரிந்தால் 
பதில் சொல்லுங்கள் 

Sunday, June 26, 2011

நான் எங்கிருக்கிறேன் ??

எங்கும் நிரம்பியிருக்கும் 
காற்று என் நாசிகளின் 
வழி நுழைந்து 
உடலில் பயனித்து 
வெளி வந்தது
இதயம் இரத்தம் 
சுத்திகரித்து தன் கடமையை 
ஓயாமல் செய்கிறது 
இன்ன பிற பாகங்கள் 
மூளையின் கட்டளையை 
வெறித்தனமாக நிறைவேற்றுகிறது 
எல்லாம் கவனிக்கிறேன் "நான்"
எங்கிருந்து கவனிக்கிறேன்??? 
என்பது தான் இன்னும் 
புரியவில்லை  

Sunday, April 24, 2011

காதல் வலி

மை கண்ணீர் வடித்து உன்
பேனா சொன்ன காதல் வலி
கவிதைக்கு புரியும் 

உன் கடைசி முத்தம்
சொன்னது உனக்கு இன்னும் 
என் மீது உள்ள பிரியம் 

என் உடைகளில்
உன் அனைப்புகளின் வாசம் 
எனக்கு மட்டுமே தெரியும்

மறந்து  விடு என்றாய் நீ 
மன்னித்து விடு என்றேன் நான்
இருவருக்கும் கடினம் தான்.
சுமக்காத போது தான்
காதலின் வலி அதிகம் !
இல்லாத காயத்தில்
எத்தனை தழும்புகள் ? 

Friday, February 11, 2011

பயணம் தொடருதே...

வழியனுப்பவும்
வரவேற்கவும்
துணைபேசவும்
ஆளில்லாத
இலக்கில்லாத பயணங்கள்
காடு மலை நிலம்
குகை கோயில்கள்
பரந்து விரிந்த படைப்பில்
தனிமை தேடி
பயணிக்கும் மனது
நடந்தவை அனைத்தும்
அனுபவம் எனப்பெற
வருபவை பற்றிய
வருத்தம் பறந்ததே.
எய்தவனை  தேடி
திரும்பிய அம்பாய்
எனை படைத்தவன்
நோக்கிய பயணம் தொடருதே...  

Wednesday, January 12, 2011

முதுமையின் தொடக்கம்

வாழ்க்கை முழுதும்
ஓடி தொலைத்து
முதுமையில் பூங்காவிலும்
சாலை ஓரங்களிலும்
நடை பயிலும்
வேடிக்கை மனிதர்கள் !
மருத்துவ காப்பீடு
மருத்துவர் தகவல்
மருமகளின் கொடுமை
பேரனின் பெருமை
என நிறைய பேசி
தனிமையில் இருந்து
தப்ப முயற்சி !
கால கடிகாரத்தில்
தன் மணி என்ன ?
அடிக்கடி எழும்
விடை தெரியா கேள்வியில்
வரும் பக்தியோடு
கோயில்களில் வலம்
வரும் நேர்த்தி.
முதுமையின் முகம்
சற்று கோரம் தான்
யாரும் கண்ணாடி தேடாதீர்கள்